முக்கிய செய்திகள்:
பிரேமலதாவுக்கு முன்ஜாமீன்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன் றத்தில் பிரேமலதா மனு தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக வேட்பாளர் களுக்கு ஆதரவு கேட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு சென்றிருந்த நான், கோபிச்செட்டிப்பாளையத்தின் பேசினேன்.

ஈரோடு மாவட்டத்தில் உண்மை யிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட வில்லை என்றும், அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் உறவினர்கள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு இந்த நிவாரண நிதி வழங்கப் பட்டுள்ளதாகவும், அவர்களில் பலருக்கு நிலம் கூட இல்லை என்றும் குறிப்பிட்டு நான் பேசினேன். எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் அவ்வாறு பேசினேன்.

இந்நிலையில் கோபிச்செட்டிப் பாளையம் நகர அதிமுக செயலாளர் அளித்த புகாரின் அடிப்படை யில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் நான் பேசியதாகக் கூறி என் மீது கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினர் கூறுவது போல எவ்வித குற்றமும் நான் செய்யவில்லை. ஆகவே, இந்த வழக்கில் என்னை போலீஸார் கைது செய்யாத வகையில் எனக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் பிரேமலதா கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. மேலும், தேவைப்பட்டால் இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்னிலையில் மனுதாரர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்