முக்கிய செய்திகள்:
மேஜர் முகுந்த் வரதராஜ் குடும்பத்துக்கு நிதியுதவி : ஜெயலலிதா உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :

'ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்