முக்கிய செய்திகள்:
முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்கிறார்

16-வது மக்களவை தேர்தலை ஒட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 24-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: "தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து 27.4.2014 அன்று நீலகிரி மாவட்டம் கொடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்