முக்கிய செய்திகள்:
அதிமுக பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக இளைஞர் பாசறை உறுப்பினர்களான பிரதீப்ராஜ், நாகராஜன் ஆகியோர் தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரண மடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புச் சகோதரர்கள் பிரதீப்ராஜ், நாகராஜன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்த்திக்கிறேன்.

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், தாராபுரம் நகர 27–வது வார்டு கழகச் செயலாளருமான பரஞ்ஜோதி, கோவை புறநகர் மாவட்ட மகளிர் அணித் தலைவர் சரோஜினி மாணிக்கம், கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தேன்.

பரஞ்ஜோதி, சரோஜினி மாணிக்கம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும் செய்திகள்