முக்கிய செய்திகள்:
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்கள் பாதுகாக்கப்படுவர் : ஜோஷி

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், “முஸ்லீம்கள் பா.ஜ.க.வை கண்டு பயப்பட தேவையில்லை. ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் தேசப்பற்றுமிக்க குடிமகன்கள் ஆவார்கள். எங்களது கட்சி ஆளும் மாநிலங்களில் எந்த கலவரங்களும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, சத்தீஸ்கர் மாநிலங்களில் எந்த கலவரமும் நடைபெற்றதாக யாரும் அறியவில்லை. அனைத்துக் கட்சிகளும் முஸ்லீம்களிடையே பா.ஜ.கவின் பயத்தை தூண்டிவிட்டு வாக்குகளை சேகரிக்க விரும்புகின்றனர். முஸ்லீம்கள் அல்லாவை தவிர பா.ஜ.க மற்றும் வேறுயாருக்கும் பயப்படத் தேவையில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்கள் பாதுகாக்கப்படுவர். எந்த கலவரமும் நடக்காது. கடந்த பத்து வருடங்களாக காங்கிரஸ் சீரழித்துவிட்டதால் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும்” என கூறினார்.

மேலும் செய்திகள்