முக்கிய செய்திகள்:
தேர்தலையொட்டி தமிழகத்தில் 144 தடை உத்தரவு

தமிழகத்தில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

இந்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஆந்திராவிற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகமாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் ரூ.51 கோடி மதிப்புள்ள பொருட்கள்,பணம் பறி-முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.23.53 கோடி ரொக்கமும், நகை உள்ளிட்ட பொருட்கள் மதிப்பு ரூ.27.44 கோடி எனவும் தகவல் தெரிவித்தார்.

மேலும் வாக்களிக்க குடும்ப அட்டை ஆவணமாக ஏற்றறுக் கொள்ளப்படமாட்டாது என்றும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

 

மேலும் செய்திகள்