முக்கிய செய்திகள்:
மோடியா இந்த லேடியா?: ஜெ பரபரப்பு கேள்வி

அ.தி.மு.க வேட்பாளரான ஜெயவர்த்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது :

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நாங்கள் கொடுத்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தி.மு.க தவறான தகவல்களை கூறுகிறது. மாறாக கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசில் இடம் பெற்றிருந்த திமுக தான் உண்மையில் தமிழக மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை என்றார்.

மேலும் குஜராத் மாநிலத்தை விட வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 36996 தொழிற்சாலைகளில் அம்மாநிலத்தை விட 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். குஜராத்தை விட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழகத்தில் குறைவு. அம்மாநிலத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவிகிதம் அதிகரிப்பு. ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 29 சதவிகிதம் குறைவு. உணவு உற்பத்தியில் குஜராத்தை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று பேசிய ஜெயலலிதா மக்களை பார்த்து, இப்போது சொல்லுங்கள் இந்தியாவில் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடியா அல்லது தமிழகத்தின் லேடியா என கேள்வியெழுப்பினார்.

மேலும் செய்திகள்