முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான போட்டியாக மாறியுள்ளது : அத்வானி

பா.ஜ.க முக்கிய தலைவரான அத்வானி வேலூரில் பிரச்சாரம் செய்த போது பேசியதாவது :

1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்றவன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராக பதவி வகித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. இதனால் அ.தி.மு.க-தி.மு.க இடையேயான போட்டி என்ற நிலை மாறி தற்போது அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான போட்டியாக மாறியுள்ளது. பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் குஜராத்தை மோடி வளர்ச்சியடையச் செய்தது போல் தமிழகத்தையும் வளர்ச்சியை நோக்கி முன்னேற்றி செல்வார் என்று அத்வானி கூறினார்.

மேலும் செய்திகள்