முக்கிய செய்திகள்:
மோடி அலை வீச வில்லை மோடிதான் வலை வீசிவருகிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 35 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டேன். செல்கின்ற இடங்களிலெல்லாம் மக்களிடம் எழுச்சியைக் காணமுடிகிறது. 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்.

3 ஆண்டுகால அதிமுக ஆட்சி யில் எந்தவித திட்டங்களும் நிறை வேற்றப்படவில்லை. விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினையால் மக்களும் அல்லல் படுகின்றனர். இதனால்தான் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு செல்லும்போது அவர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர் என நான் கூறியதற்கு, இதனை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் உள்ள கருப்புப்பட்டியில் வாக்கு சேக ரிக்க சென்றபோது, “ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்துதருவதாக கூறினார். ஆனால், எந்த வசதியும் செய்துதரவில்லை இப்போது நீங்கள் வாக்கு கேட்டு வந்துவிட்டீர்கள்” என கேள்வி எழுப்பி வேட்பாளரை விரட்டியடித்ததாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் என்ன பதில் அளிக்கப்போகிறார்?

தமிழகம் முழுவதும் திமுகவின் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது.

நாட்டில் மோடி அலை வீச வில்லை. மோடிதான் ரஜினி, விஜய் என ஒவ்வொருவராக சந்தித்து வலை வீசிவருகிறார். தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான எதிர்ப்பு அலைதான் வீசி வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்