முக்கிய செய்திகள்:
கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்

சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.

என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.

நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது. மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அற்புதம்மாள்.

மேலும் செய்திகள்