முக்கிய செய்திகள்:
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சென்னை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 ஆண்டுகளாக நடந்து வந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது .

நீதிபதி அளித்துள்ள தீர்ப்பின் விவரமாவது ;

அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்யமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர்.

அத்துடன், பாரதியோடு சேர்ந்து அவர்கள் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்கள் 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்