முக்கிய செய்திகள்:
குழந்தை மரணத்திற்கு : ஜெயலலிதா இரங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமம், காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் 15.4.2014 அன்று தவறி விழுந்த கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் ஒன்றறை வயது குழந்தை சுஜித் 16.4.2014 அன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்