முக்கிய செய்திகள்:
மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, கோவையில் இன்று நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சாரப் பொது கூட்டங்களில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, கோவையில் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்திந்துப் பேசினார். மோடியின் அழைப்பை ஏற்று, அவர் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்