முக்கிய செய்திகள்:
மழை வேண்டி திருவிளக்கு பூஜை

ஈரோடு தில்லைநகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடந்தது.

தொடர்ந்து கோவில வளாகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி உலக நன்மைக்காகவும், ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்து விவசாயம் சிறக்கவும் திருவிளக்கு பூஜை நடந்தது.

இந்த பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து குத்து விளக்குகளை எடுத்து வந்து திருவிளக்கு பூஜை நடத்தினர்.

இந்த திருவிளக்கு பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது.

மேலும் செய்திகள்