முக்கிய செய்திகள்:
ஞானதேசிகனிடம் பறக்கும் படையினர் விசாரணை

கன்னியாகுமரியில் நாளை காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி பிரசாரம் செய்கிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடை மற்றும் மைதானத்தை பார்வையிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து தங்கநாற்கர சாலை வழியாக காரில் சென்றார்.

வழியில் அவரது காரை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜா ஆறுமுக நயினார் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஜோசப் பேசில் ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் மறித்தனர்.

காரை சோதனையிட முயன்றபோது காரில் இருந்த ஞானதேசிகன் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து அவரது காரை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்