முக்கிய செய்திகள்:
விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனது பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார். அங்கு திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பேசிய போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசியதாவது:-

என்னால் அதிகம் பேச முடியவில்லை மக்களே, என்னை மன்னித்து விடுங்கள். தொண்டை வலியால் அவதிப்பட்டேன், டாக்டர்கள் பிரசார கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நான் பிரசாரம் செய்வேன் என்று வந்துள்ளேன். நான் அதிகம் பேசவேண்டும் என்று நினைத்தேன், முடியவில்லை. உமாசங்கருக்கு கொட்டும் முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டதை தொடர்ந்து திருக்கோவிலூர், திண்டிவனத்தில் நடைபெற இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக வேட்பாளர் உமாசங்கர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்