முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பட்டாசு கிட்டங்கி உரிமக் கட்டணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஃபோர்மேன் உரிம புதுப்பிப்புப் கட்டணம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதிலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே, பட்டாசு ஆலைகள் இயங்குவதற்கான அடிப்படை கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டு வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ஜெயல்லிதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்