Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் : விஜயகாந்த் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் : விஜயகாந்த்

நாகை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருவாரூர் கீழவீதியில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் போது பேசிய விஜயகாந்த் ;,திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தோண்டி கொண்டு தான் இருக்கிறார்கள். பணி நிறைவு பெறவில்லை. கமலாலய குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல நாட்களாகியும் அதனையும் சீரமைக்கவில்லை. இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். டெபாசிட் வாங்க முடியாத நிலை ஏற்படுத்திட வேண்டும்.

மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் அனுமதிக்கப்பட்டது. அதன் பின் அ.தி.மு.க. அரசு தடையில்லா சான்றும் வழங்கியது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் திடீரென அந்த திட்டத்தினை ஆய்வு செய்ய அ.தி.மு.க. அரசு ஒரு குழு அமைத்தது. குழு அமைத்து 8 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மீத்தேன் திட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகிறது.

நாகையில் சிறிய துறைமுகம் செயல்பட்டு வந்தது. அதன் மூலம் வெங்காயம், மீன் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த துறைமுகம் செயல்படவில்லை. மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறது. கடிதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?

மோடி தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றி தருவோம். இன்று தி.மு.க. சொத்து விவரங்களை அ.தி.மு.கவும், அ.தி.மு.க.வின் சொத்து விவரங்களை தி.மு.க.வும் மாறி, மாறி வெளிப்படுத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம். நிச்சயம் தேவைகளை நிறைவேற்றி தருவோம். தி.மு.க. 5 முறை ஆட்சி செய்தது. அ.தி.மு.க. 3 முறை ஆட்சி செய்து வருகிறது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 40 ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எனவே மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திட 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே நாகை பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்