முக்கிய செய்திகள்:
இலங்கை படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை படையினர், தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்