முக்கிய செய்திகள்:
பாஜக மதவாத கட்சி : மு.க.ஸ்டாலின்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது: "பாஜக தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் இடம்பெற்றிருக்கிறது. இது பாஜக மதவாத கட்சி என்பதை பறைசாற்றுகிறது.

இப்படிப்பட்ட மதவாத கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட்டு மெகா கூட்டணி என கூறுகின்றன சில அரசியல் கட்சிகள். இதில் இருந்தே தமிழகத்தில் சந்தர்ப்பவாதத்தால் உருவானதே பாஜக கூட்டணி என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

மேலும் செய்திகள்