முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவை பிரதமர் அரியணையில் அமர்த்துவோம் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 40 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று ஜெயலலிதாவை பிரதமர் அரியணையில் அமர்த்துவோம்,தமிழக முதல்வரின் நூறாண்டு பேசிடும் 3 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி மாபெரும் வெற்றி பெறுவோம் .

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக இறுதி வரை செயல்பட்டு வெற்றி பெறுவோம் என கூறினார் .அமைச்சர் செல்லூர் ராஜு ,மேயர் ராஜன் செல்லப்பா ,எம் எல் ஏ முத்துராமலிங்கம் ,எம் எஸ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்

 

மேலும் செய்திகள்