முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா தன் சுயலாபத்திற்காக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார் -காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் குற்றச்சாட்டு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் ,கூடங்குளம் அணுமின் நிலைய செயல்பாட்டினை முன்பே தொடங்கி இருந்தால் தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்து இருக்கும் .

ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் இரட்டை நிலையை கையாண்டு விட்டு தற்போது  தன் சுயலாபத்திற்காக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார் என்றார் .மேலும் திராவிட கட்சிகள் எல்லாம் மோடி வலையில் சிக்கி கொண்டுள்ளன என்றார் .

தேசிய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது .இதனை கருத்தில் கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார் .காங்கிரஸ் பிரமுகர்கள் சிலுவை ,பி .காந்தி மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சேதுராமன் ,மகளிர் அணி மீனாட்சி ,தனசேகரன் ,ராகுல் காந்தி பேரவை மாவட்ட தலைவர் சந்தான கிருஷ்ணன் ,ராகுல் காந்தி பேரவை பொருளாளரும் 92 வது வார்டு தலைவர் கந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்