முக்கிய செய்திகள்:
40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாளை (1–ந்தேதி) பிற்பகல் 1.40 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதேபோல் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. வேட்பாளர்கள் நாளையும், பா.ம.க. வேட்பாளர்கள் 3–ந்தேதியும், தே.மு.தி.க. வேட்பாளர்கள் 5–ந்தேதியும் மனுதாக்கல் செய்கின்றனர்.

பாரதீய ஜனதா வேட்பாளர்கள் நல்ல நாள், நேரம் பார்த்து நாளை முதல் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்