முக்கிய செய்திகள்:
கொ.ம.தே.க. வேட்பாளர் ஈஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பு

கொ.ம.தே.க. வேட்பாளர் ஈஸ்வரன் பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது வேட்பாளர் ஈஸ்வரன் பேசியதாவது:,

இந்தியா வலிமையான பாரதமாக உருவாகிட மத்தியில் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். தற்போது நரேந்திரமோடி அலை வீசுகிறது. வழக்கம் போல தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு வெற்றிபெற்ற உடன் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியை யாரும் அசைக்க முடியாது. நரேந்திர மோடி நாட்டை ஆள மக்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 

மேலும் செய்திகள்