முக்கிய செய்திகள்:
40 தொகுதிகளிலும் அம்மா வெற்றி பெற்றால் பிரதமராவது உறுதி : ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை நாடார் மேலரதவீதி, வேலாயுதபுரம், புளியம்பட்டி, சிவன்கோவில், முஸ்லீம் தெரு, புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்பட பல நகர பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வாக்கு கேட்டு பிரசாரம் செய்தனர். பிரசாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:–

தமிழகத்திற்கு நதிநீர் பிரச்சினை உள்பட தமிழக உரிமைகளை யாரிடமும் கையேந்தாமல் பெற்றிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அம்மா பிரதமராக வேண்டும்.

தமிழகத்தில் அம்மா மாணவ–மாணவிகளுக்கு சைக்கிள், மடிகணினி, பெண்களுக்கு திருமண உதவிபணம், தாலிக்கு தங்கம், விவசாயிகளுக்கு கரவை மாடு, ஆடு, பசுமை வீடுகள் என பல நலத்திட்டங்கள் வழங்கி வருகிறார். தி.மு.க. வேட்பாளர் ஒரு வியாபாரி, கலைஞர் வியாபாரம் செய்தவற்காகவே ஒரு கோட்டீஸ்வரரை வேட்பாளராக அறிவித்துள்ளார். அவருக்கு ஏழை மக்களை பற்றி எதுவும் தெரியாது. வடமாநில தலைவர்களும் அம்மா பிரதமர் ஆவதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் அம்மா வெற்றி பெற்றால் பிரதமராவது உறுதி என்றார்.

மேலும் செய்திகள்