முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி 10 தொகுதிகளில் போட்டி

சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் இளங்கோ மயிலாடுதுறையில் வேட்பாளரை அறிமுகம் செய்து பேசியதாவது:–

சமாஜ்வாதி கட்சியினைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். மயிலாடுதுறை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, பொள்ளாச்சி, வேலூர், கரூர் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

கட்சியின் தலைவர் முலாயம்சிங் அல்லது உ.பி முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆகியோரில் ஒருவர் ஏப்ரல் 14-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இடதுசாரிகளிடம் தேர்தலுக்காக ஆதரவு கோரியுள்ளோம்.

அதேபோல் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாங்களும் ஆதரவு தெரிவிப்போம். தேசிய அளவில் மோடி அலை வீசுவதாக மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

1989-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முற்பட்டார். அப்போது அதனை பாபர் மசூதி இடிப்பு என்றப் போர்வையால் தடுத்து நிறுத்தியது ஆர்எஸ்எஸ். சங்பரிவார் போன்ற அமைப்புகள்.

முலாய ம்சிங்கால் மட்டுமே தேர்தலுக்குப் பின்னால் 3-வது அணியை உருவாக்கமுடியும். அவர்தான் நாட்டின் பிரதம ராவதற்குரிய அனைத்து தகுதியையும் பெற்றவர்.

இந்தியாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத ஆட்சி அமையவேண்டும். ஊழல் காங்கிரசுக்கு இந்த தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்