முக்கிய செய்திகள்:
வான் வழிப்பயணமாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதா : ப.சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள தனது எம்.பி. அலுவலகத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு என வாக்குகள் கிடையாது. ஆனால் அவர்களுக்கு காவடி தூக்க 3 கட்சிகள் களம் இறங்கி உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அரசியல் என பாரதீய ஜனதாவிற்கு 2 முகங்கள் உள்ளன. இதில் வல்லபாய் படேலால் தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அந்த இயக்கத்தில் முஸ்லிம்கள் ஒருவர்கூட உறுப்பினர் கிடையாது.

குஜராத்தில் 3 சட்டமன்ற தேர்தல், 3 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் கிடையாது. இந்த சூழலில் மோடி மதச்சார்பற்ற தலைவராக அனைத்து மதத்தினரையும் எப்படி அரவணைத்து செல்வார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார். உண்மையில் அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வான் வழிப்பயணமாக ஹெலிகாப்டர் மூலம் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஒரே முதல்வர் அவர்தான்.

எனவே அவர் பிரசார மேடையில் பாடும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலை இனிபாட வேண்டாம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்