முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 9,222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பிரவீண்குமார்

தமிழகத்தில் 9,222 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை அத்துமீறல்களை பொது மக்களே புகைப்படம் எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அனுப்பலாம் என்றும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணைய முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் புகார் தெரிவிப்பவர்கள் பெயர், விவரங்கள் உள்ளிட்ட அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என பிரவீன் குமார் கூறினார்.

மேலும் செய்திகள்