முக்கிய செய்திகள்:
ஜூன் மாதத்திற்கு பின் மின்வெட்டு கிடையாது: ஜெயலலிதா

மதுரையில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜெயலலிதா தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் அவ்வபோது ஏற்படும் பிரச்சனைகளால் ஓரிரு நாள் ஏறபட்ட மின் பற்றாக்குறையை எதிர்கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது பற்றி மேலும் அவர் பேசுகையில், "ஏற்கனவே 2,500 மெகாவாட் மின்சார உற்பத்தியை நாங்கள் கூட்டியுள்ளோம். இதோடு வெயில் காலத் தேவையை மனதில் வைத்து 500 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவுள்ளோம். மேலும் 3,300 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான நீண்ட கால ஒப்பந்தமும் செய்துள்ளோம். ஆனால் சென்ற வாரம் ஏற்பட்ட இரண்டு நாள் மின் தடையை பெரிய பிரச்சனையாக முன் வைக்கும் எதிர் கட்சிகள், அது குறித்து அரசு எதுவும் செய்யவில்லை என்றும் கூறிவருகின்றன.

மின்சாரம் குறித்த பிரச்சனைகளை நான் தினமும் கண்காணித்து வருகிறேன். இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம். ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் மின் தடை இருக்காது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்