முக்கிய செய்திகள்:
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறுகையில், "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போனது என்று பரவலாக கூறப்பட்டாலும், 23 நாடுகள் அந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவும் அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும்" என்றார்.

மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை திமுக ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற கட்சி. கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அவர், மக்களவை தேர்தல் நிறைய ஆச்சர்யமான முடிவுகளை அளிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்