முக்கிய செய்திகள்:
எனது வெற்றியை தடுப்பதற்கு சாதி வெறியை தூண்டி விடுகிறார்கள் : ஏ.கே.மூர்த்தி

ஆரணி தொகுதியில் நடந்த மோதல் பற்றி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கூறியதாவது:–

ஆரணி தொகுதிக்குட்பட்ட வந்தவாசி தொகுதியில் நேற்று போலீஸ் அனுமதி பெற்று வார்டு வார்டாக பிரசாரத்தில் ஈடுபட்டோம்.

பெரியகாலனி பகுதியில் இரவு 7 மணிக்கு பிரசாரம் செய்தபோது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் திரும்பி வரும்போது 100–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று வழிமறித்து பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

முன்கூட்டியே தெரு விளக்குகளையும் அணைத்து விட்டனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டபோது அந்த கிராம மக்கள் அவர்களை கண்டித்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. இது செ.கு.தமிழரசன் கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். இந்த தொகுதியை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் பிரசாரம் செய்து வருகிறேன். எனது வெற்றி வாய்ப்பு- பிரகாசமாக இருக்கிறது.

இதை தடுப்பதற்காக திட்டமிட்டு வன்முறை மற்றும் சாதி வெறியை தூண்டி வருகிறார்கள். பொதுமக்கள் இவர்களின் சாதி வெறிக்கு இடம் தரக்கூடாது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை. தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்