முக்கிய செய்திகள்:
திருமாவளவனுக்கு பாதுகாப்பு

தேர்தல் பிரசாரத்தின் போது தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சில சாதிய சக்திகளால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரசாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று திருமாவளவன் கோரி இருந்தார்.

இந்த மனுமீது விசாரணை நடத்திய நீதிபதி சி.டி.செல்வம் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தனி பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமித்து திருமாவளவனுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்