முக்கிய செய்திகள்:
திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.உதயகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது என்று குற்றம் சாட்டினார். தமிழர்களுக்கு எதிரான அணை பாதுகாப்பு மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை. தற்போது நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்று தி.முக. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும் என்றும் முதல்வர் பேசினார்.

மேலும் செய்திகள்