முக்கிய செய்திகள்:
தாமரை சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டி

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி தொகுதி கொ.ம.தே.க. வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனை நிற்கும் படி உயர்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்ட வில்லை. கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்துவதால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, ‘‘இந்த தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பம் இல்லை. ஆனால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அதனால் மாலையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில்தான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்.

பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. கொங்கு செழிக்க மோடி பிரதமராக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்