முக்கிய செய்திகள்:
தேனி மாவட்டத்தில் பலத்த மழை

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இது கோடை வெப்பத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு பெரிதும் ஆறுதலாக இருந்தது.

மழை காரணமாக நீர்வரத்து இல்லாமல் இருந்த பெரியாறு அணைக்கு இன்று காலை 100கனஅடி தண்ணீர் வந்தது. அதேபோல் கடந்த 1 மாதமாகவே நீர்வரத்து இல்லாமல் இருந்த வைகை அணைக்கும் 7 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த கோடை மழை மேலும் சில நாட்கள் நீடித்தால் குடிநீர் பஞ்சத்திற்கு தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்

மேலும் செய்திகள்