முக்கிய செய்திகள்:
வேப்பமரத்தில் பால் பொது மக்கள் பூஜை செய்து வழிபாடு

தஞ்சாவூர் குறிஞ்சிகுட்டையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது வீட்டின் பின்புறம் பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தை அவர்கள் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 23ந் தேதி அன்று காலை வழக்கம் போல் சாமி கும்பிடுவதற்க்காக சென்ற ராஜமாணிக்கம் வேப்பமரத்தில் பால் வடிவதைக் கண்டு வியந்தார்.

இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனையடுத்து வேப்ப மரத்திற்கு பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த பால்வடியும் வேப்பமரத்தை பக்தியுடனும் வணங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்