முக்கிய செய்திகள்:
தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

தமிழக பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு இன்று அக்கட்சி தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், ஈஸ்வரன் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதன்படி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு;

தேமுதிக - 14, பாமக-8, மதிமுக-7, கொ.ம.தே.க-1, ஐ.ஜே.கே-1, பா.ஜ.க-8 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் வருமாறு;

பாஜக: தென் சென்னை, கன்னியாக்குமரி, கோவை, நீலகிரி(தனி), சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர் மற்றும் தஞ்சாவூர்

தேமுதிக: திருவள்ளூர்(தனி), வட சென்னை, மத்திய சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, திருச்சி, கடலூர், விழுப்புரம்(தனி), கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி

மதிமுக: விருதுநகர், ஈரோடு, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம்(தனி), தேனி, தூத்துக்குடி மற்றும் தென்காசி(தனி)

பாமக: அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, சிதம்பரம்(தனி), திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கிருஷ்ணகிரி

கொ.ம.தே.க: பொள்ளாச்சி

ஐ.ஜே.கே: பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்