முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 3.3.2014 முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, வருகின்ற 21.3.2014 முதல் 21.4.2014 வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மார்ச் 21–ந்தேதி: விருதுநகர்– அண்ணாமலையார் நகர்,

சிவகாசி– திருத்தங்கல் நெடுஞ்சாலை, திருத்தங்கல் நகரம்.

சிவகங்கை– போக்குவரத்து நகர், ஆவின் பால்பண்ணை மேல்புறம், காரைக்குடி

23–ந்தேதி: கடலூர்– மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

விழுப்புரம் (தனி)– ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை - விழுப்புரம் செல்லும் வழி

25–ந்தேதி: திண்டுக்கல்– அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி ரோடு, திண்டுக்கல்,

தேனி– ஆண்டிபட்டி ரோடு, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்டி ஒன்றியம்

27–ந்தேதி: புதுச்சேரி: ஏ.எப்.டி. மைதானம், கடலூர் சாலை, உப்பளம்

28–ந்தேதி: மதுரை– கிருஷ்ணா திடல், திருப்பாலை (மாநகராட்சி 24-ஆவது வட்டம்)

29–ந்தேதி: - ராமநாதபுரம்– ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.

ஏப்ரல் 1–ந்தேதி: பொள் ளாச்சி– சி.டி.சி. மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி,

கோயம்புத்தூர்– வ.உ.சி. பூங்கா மைதானம், கோவை.

3–ந்தேதி: நாமக்கல்– கருப்பட்டி பாளையம் பிரிவு, கிரீன் பார்க் பள்ளி அருகில், நாமக்கல்.

சேலம்– போஸ் மைதானம், சேலம்

5–ந்தேதி: தஞ்சாவூர்– புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம்.

திருச்சி– எடமலைப்பட்டி புதூர் மைதானம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி.

8–ந்தேதி: அரக்கோணம்– அம்மூர் பேரூராட்சி, ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி.

திருவள்ளூர் (தனி)– சென்னை– திருவள்ளூர் நெடுஞ்சாலை, கவரப்பாளையம், ஆவடி.

10–ந்தேதி:- நீலகிரி– (தனி) சிறுமுகை நான்கு ரோடு, தேரம்பாளையம், காரமடை ஒன்றியம்

11–ந்தேதி: திருநெல்வேலி– திருநெல்வேலி மாநகராட்சித் திடல்

13–ந்தேதி: கரூர். திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர்

பெரம்பலூர்– தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறி பேரூராட்சி.

15–ந்தேதி: ஆரணி– ஆரணி ரோடு மைதானம், செய்யார்

வேலூர்– காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்

17–ந்தேதி: கிருஷ்ணகிரி– பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி

தருமபுரி– தருமபுரி பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில்.

19–ந்தேதி: மத்திய சென்னை, வட சென்னை

21–ந்தேதி: ஆலந்தூர், தென் சென்னை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்