முக்கிய செய்திகள்:
நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவிற்கு உத்தரவு

முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீது 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யாததால் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது வரும் ஏப்ரல் 3ந் தேதி நடக்கும் நீதிமன்ற விசாரணைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்