முக்கிய செய்திகள்:
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

இலங்கை அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்