முக்கிய செய்திகள்:
தி.மலையில் ஜெயலலிதா பிரச்சாரம்

திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆர்.வனரோஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமம், செங்கம் சாலையில் உள்ள அரசு புதிய பால்பண்ணை அருகில் பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

இதில் அவர் பேசியதாவது :-

வரும் மக்களவை தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்திய மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகள். பாதுகாப்பு துறையை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய அரசின் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தும் தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் திருவண்ணாமலையில் 33 மாதங்களில் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 50 லட்சம் செலவில் நவீன கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 15.42 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலையில் முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்