முக்கிய செய்திகள்:
அதிமுக சார்பில் மதுரை ஒத்தக்கடையில் ஆலோசனை கூட்டம்

மதுரை ஒத்தக்கடையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் தமிழக முதல்வரை பாரத பிரதமாராக அரியணையில் ஏற்றுவோம் என்று சபதம் எடுப்போம் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மாநகர மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, டெல்லி பிரதிநிதி எஸ்.தி.கே.ஜக்கையன் ,எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எம்.எஸ் பாண்டியன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்