முக்கிய செய்திகள்:
தேனி அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபன் வீதி வீதியாக பிரசாரம்

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபன் அலங்காநல்லூர் பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். இவரது வருகையையொட்டி அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும் கும்பமரியாதை அளித்தனர்.

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும் பள்ளி குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை தமிழகத்தில் நடைபெறும் பொற்கால ஆட்சியில் எவ்வாற்யெல்லாம் பயன் அடைந்தார்கள் என பட்டியலிட்டு பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், ஓன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்