முக்கிய செய்திகள்:
வளர்ச்சிக்கான மாற்றம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: ஜெ. பிரசாரம்

ஜெயலலிதா இன்று கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் டாக்டர் க.காமராஜை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆற்காடு மில் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்திய வளர்ச்சிக்கான தேர்தல். ஊழல் ஆட்சியை உதறிவிட்டு ஊழலற்ற மக்களாட்சி அமையவும், 2ஜி ஸ்பெக்டரம் மூலம் கோடிகளில் ஊழல் செய்தவர்களை தூக்கியெறியவும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான இடத்தை தாருங்கள்.

மத்திய வலுவான ஆட்சி அமைய எனது கரத்தை வலுப்படுத்துங்கள். 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று எழுச்சியுரை ஆற்றினார்.

மேலும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும், திமுக தலைமை கழகத்தின் மீதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மண்ணென்ணெய் ஒதுக்கீட்டை குறைத்தது, ஈழத் தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

அதிமுகவின் சாதனைகளான, கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம், தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது போன்ற நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

மேலும் செய்திகள்