முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை வாபஸ் வாங்கும் ; பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி கூட்டணி விளங்கும். கூட்டணிக்கு கட்டுப்பட்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை தே.மு.தி.க. வாபஸ் வாங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது இணக்கமான கூட்டணி. இங்கு பிரச்சினை ஏற்படுத்த சிலர் முயல்கிறார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து மோடியை பிரதமராக்குவோம்.

தமிழகத்தில் மெகா கூட்டணியை பாரதிய ஜனதா கட்சி அமைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் தொடங்கிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று பிரசாரம் செய்து வருவது பாராட்டக்கூடியது. வளமான, பலமான இந்தியாவை உருவாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்