முக்கிய செய்திகள்:
18 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் போட்டி : தா.பாண்டியன் - ராமகிருஷ்ணன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் (தலா 9 தொகுதிகள்) போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1. தென்காசி

2. நாகை

3. திருப்பூர்

4. சிவகங்கை

5. புதுவை

6. கடலுர்

7  திருவள்ளூர்

8. தருமபுரி

9. தூத்துக்குடி  ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1. கோவை

2.  மதுரை

3.  வட சென்னை

4.  கன்னியாகுமரி

5.  திருச்சி

6.  திண்டுக்கல்

7.  விருதுநகர்

8.  தஞ்சை

9.  விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்ச் 16-ந் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் தெரிவித்தார்.

இதேபோல் 17-ந்தேதி தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அறிவித்தார். இந்த 18 தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், யாரை ஆதரிப்பது? என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்