முக்கிய செய்திகள்:
ஆலந்தூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக ஆர்.எஸ்.பாரதி

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக ஆர்.எஸ்.பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பில், ஆலந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் நகராட்சித் தலைவராக நான்கு முறைக்கு மேலாக பதவி வகித்த ஆர்.எஸ்.பாரதி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த முறை ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், சமீபத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்