முக்கிய செய்திகள்:
கூட்டணி அமையாவிட்டால் காங். தனித்துப் போட்டி: ப.சிதம்பரம்

தமிழகத்தில் கூட்டணி அமையாவிட்டால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "காங்கிரஸ் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும்.ஒருவேளை கூட்டணி எதுவும் அமையவில்லை என்றாலும், அனைத்து (40 இடங்கள்) தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம். கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்" என்றார் ப.சிதம்பரம்.

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும்,கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினின் தலையீடு காரணமாக, அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கது.

 

மேலும் செய்திகள்