முக்கிய செய்திகள்:
திமுக வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியன உள்ளன.

வேட்பாளர்கள் விபரம்:

தென் சென்னை: டி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய சென்னை: தயாநிதி மாறன்

வட சென்னை: இரா. கிரி ராஜன்

ஸ்ரீபெரும்புதூர்: எஸ்.ஜெகத் ரட்சகன்

காஞ்சிபுரம் (தனி)- ஜி.செல்வம்

அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ

கிருஷ்ணகிரி- பி. சின்ன பில்லப்பா

தர்மபுரி- இரா. தாமரைச் செல்வம்

திருவண்ணாமலை- சி.என்.அண்ணா துரை

ஆரணி- ஆர்.சிவானந்தம்

விழுப்புரம் (தனி)- கோ.முத்தையன்

கள்ளக்குறிச்சி- இரா. மணிமாறன்

சேலம்- செ.உமாராணி

நாமக்கல்- செ.காந்தி செல்வம்

திருநெல்வேலி- சி.தேவதாஸ சுந்தரம்

தூத்துக்குடி- பெ.ஜெகன்

கன்னியாகுமரி- எப்.எம்.ராஜரத்தினம்

ஈரோடு- பவித்திரவள்ளி

திருப்பூர்- செந்தில்நாதன்

நீலகிரி (தனி)- ஆ.ராசா

கோவை- கி.கணேஷ்குமார்

பொள்ளாச்சி- பொங்கலூர் நா. பழனிச்சாமி

திண்டுக்கல் - எஸ்.காந்திராஜன்

கரூர்- ம. சின்னசாமி

திருச்சி- என்.எம்.யூ. அன்பழகன்

பெரம்பலூர்- ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு

கடலூர்- கொ. நந்தகோபால கிருஷ்ணன்

நாகப்பட்டினம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்

தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு

சிவகங்கை- சுப துரைராஜ்

மதுரை- வ.வேலுச்சாமி

தேனி- பொன். முத்துராமலிங்கம்

விருதுநகர்- எஸ்.ரத்தினவேல்

ராமநாதபுரம்- எஸ்.முகமது ஜலீல்

புதுச்சேரி - ஏ.எம்.எஹ்.நாஜிம்

மயிலாடுதுறை- மனித நேய மக்கள் கட்சி

வேலூர்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

சிதம்பரம்- விடுதலை சிறுத்தைகள்

திருவள்ளூர் (தனி) - விடுதலை சிறுத்தைகள்

தென்காசி- புதிய தமிழகம்

ஆலந்தூர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திருவள்ளூர் (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்