முக்கிய செய்திகள்:
இடதுசாரிகள் இல்லாமல் அதிமுக வெற்றி பெறாது: காரத்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணை இல்லாமல், அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று நாகையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடம் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா கொடியேற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.இந்த நினைவிடத்தைத் திறந்து வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத் பேசும்போது, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாமல் அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இவ்விரு கட்சிகளின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.முன்னதாக, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அதிருப்தி காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்